Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ்ஆப்பில் புக் செய்தால்…. சிலிண்டர் வீடு தேடி வரும்…. புக் செய்வது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

வாட்ஸ்அப் மூலமாகவே சமையல் சிலிண்டரை மிக எளிதாக புக் செய்து எப்படி வாங்க முடியும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

வீட்டு உபயோக சிலிண்டரை புக்கிங் செய்வதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. போன் கால், எஸ்எம்எஸ், ஆன்லைன், செல்போன் செயலி போன்ற பல்வேறு வசதிகள் இருந்தாலும் வாட்ஸ் அப் மூலமாக முன்பதிவு செய்து வாங்குவது மிகவும் ஈஸியாக இருக்கிறது. இந்த வசதியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

பதிவு செய்வது எப்படி?

உங்களுடைய செல்போன் நம்பரில் இருந்து பெட்ரோலிய நிறுவனங்களின் பிரத்தியேக எண்ணுக்கு தொடர்பு கொள்வதன் மூலம் வாட்ஸ் ஆப் மூலமாக சிலிண்டர் பதிவு செய்ய முடியும்.

இதையடுத்து பதிவு செய்த பிறகு அந்த எண்ணிலிருந்து உங்களுக்கு  உடனடியயாக உறுதிப்படுத்தும் செய்தி வரும்.

அதை தொடர்ந்து சென்று அதற்கான பணத்தை செலுத்துவதற்கான லிங்க் அனுப்பப்படும். அதன் மூலம் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டை, யுபிஐ போன்ற எந்த முறையிலும் பணத்தை செலுத்த முடியும்.

வாட்ஸ்அப் நம்பர்:

பாரத் பெட்ரோலியம் வாடிக்கையாளர்கள் : 1800224344

இண்டேன் சிலிண்டர் வாடிக்கையாளர்கள்: 7588888824

ஹெச்.பி. வாடிக்கையார்கள்: +91 92222 01122

இந்த நம்பர்களுக்கு வாட்ஸ் ஆப் செய்ய வேண்டும்.

Categories

Tech |