இரவு முழுவதும் சார்ஜ் போடுவதால் என்ன நடக்கும் என்பது பற்றிய உண்மை தகவல் வெளியாகியுள்ளது.
நாம் நம்முடைய செல்போன் பயன்படுத்திவிட்டு பின்னர் சார்ஜ் செய்வதற்காக இரவு நேரத்தில் போட்டுவிட்டு அப்படியே தூங்கி விடுகிறோம். இதனால் இரவு முழுவதும் செல்போன் சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும். இவ்வாறு இரவு முழுவதும் ஸ்மார்ட் போனுக்கு சார்ஜ் போட்டால் அது போனுக்கு ஆபத்து என்று பரவலாக ஒரு கருத்து இருந்து வருகிறது. ஆனால் இந்த கருத்து உண்மை அல்ல.
ஸ்மார்ட் போனுக்கு இரவு முழுதும் சார்ஜ் போட்டால் 100% சார்ஜ் ஏறியவுடன் தந்து செயல்பாட்டை ஸ்மார்ட் போன் தன்னைத்தானே நிறுத்திவிடும் என டெக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இரவு முழுக்க சார்ஜ் ஏற்றப்படுவதால் ஸ்மார்ட்போன் சூடாக வாய்ப்புள்ளது என்று கூரப்படுகின்றது.