நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகளுக்கு அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டு முதற்கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அரசியல் தலைவர்களும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு அரசு நிர்ணயித்த ரூபாய் ரூ.250 விலையைவிட அதிக கட்டணம் வசூலித்தால் மக்கள் 104 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் கொடுக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இவ்வாறு புகார் அளிக்கப்படும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.