Categories
தேசிய செய்திகள்

விடுமுறை தினத்தில் சக ஊழியர்களை தொந்தரவு செய்தால்”….”இனி இதுதான் தண்டனை”… அதிரடி அறிவிப்பு….!!!!!

பொதுவாக விடுமுறை தினங்களில் நாம் குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பதோடு, அந்த நாளில்தான் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட விடுமுறை நாளில் யாராவது நம்மை தொந்தரவு செய்தால் அந்நாளே வீணாகிவிடும். குறிப்பாக நம்முடன் பணியாற்றும் சக ஊழியரே பணி நிமித்தம் காரணமாக தொந்தரவு செய்வார்கள். இதனால் உங்கள் விடுமுறை நாளில் நீங்கள் நிம்மதியாக நேரத்தை செலவிட முடியாது. இந்நிலையில் விடுமுறை நாளில் சக ஊழியர் தொந்தரவிலிருந்து பாதுகாப்பதற்காக ட்ரீம் 11 நிறுவனம் ஒரு புதிய விதிமுறையை அமல் படுத்தியுள்ளது. அதன்படி விடுமுறை நாளில் சக ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

அதோடு குறுஞ்செய்தி அனுப்புதல், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசுதல் போன்ற செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் விடுமுறை தினத்தில் தான் ஒருவர் புத்துணர்ச்சியோடு இருப்பதோடு, வாரம் முழுவதும் ஏற்பட்ட டென்ஷன் அனைத்தையும் மறந்து நிம்மதியாக ஓய்வெடுப்பார். இந்த ஓய்வு நாளை யாரும் வீணடிக்க கூடாது என்பதற்காக தான் தொந்தரவு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நடைமுறையை கொண்டு வந்ததாக சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது ‌

Categories

Tech |