Categories
தேசிய செய்திகள்

இதை செய்யாவிட்டால்…. ATM-ல் பணம் எடுக்க முடியாது…. உடனே பண்ணிருங்க…!!

பான் (PAN) என்பது வரி செலுத்துபவர்களுக்கு வழங்கப்படும் தனித்துவமான பத்து இலக்க எழுத்து எண் ஆகும். வங்கி கணக்கு திறப்பதற்கும், வங்கியில் பணம் போடுவதற்கும், அசையா சொத்துக்கள் வாங்குவதற்கும், வருமான வரித்துறையினர் உடனான பரிவர்த்தனைகள் அனைத்திற்கும் பான் என்னை கட்டாயமாக இணைக்கவேண்டும். வங்கி கணக்குடன் ஆதார் அட்டை இணைப்பு அவசியம் என்பதை போல தற்போது பான் இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வங்கி பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்கும், வருமான வரி தாக்கல் கண்காணிப்புக்கும் பான் பயன்படுவதால் மத்திய அரசு இதை கட்டாயமாக்கி உள்ளது.

வங்கி கணக்குடன் பான் இணைக்காதவர்கள் பண பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும். எனவே வங்கி கணக்குடன் பான் இணைக்கத்தவர்கள் உடனே இணைக்க வேண்டும். இதற்கு வங்கிகளுக்கு நேரடியாகச் சென்றோ அல்லது இன்டர்நெட் பாங்கிங் வெப்சைட் இல் லாகின் செய்து service request என்ற பிரிவின்கீழ் update pan card என்ற வசதியை கிளிக் செய்து பான் எண்ணை இணைக்கலாம். இதில் தேவையான அனைத்து விவரங்களையும் பதிவு செய்து விட்டு பின்ன விவரங்களை சரிபார்த்த பிறகு SUBMIT கொடுத்தல் வங்கி கணக்குடன் பான் இணைக்கப்பட்டு விடும்.

Categories

Tech |