Categories
அரசியல்

தேர்தலில் வெற்றி பெற்று எதும் செய்யவில்லை என்றால் ராஜினாமா….கமல்ஹாசன் அதிரடி….!!

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எதும் செய்யவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் முனியசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றத்தின் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கட்சியில் சிறிய தவறு நடந்தாலும் அதனை திருத்திக் கொள்ளும் தைரியம் எங்களுக்கு உண்டு எனக் கூறிய  கமல்ஹாசன் மக்களின் அடிப்படை வசதிகயை கூட செய்து கொடுக்காத இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டாமா என்று கேள்வி எழுப்பினார்.

கமல்ஹாசன் க்கான பட முடிவு

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன்,பல்வேறு  திட்டங்களை செய்வதாகக் கூறி அவர்களின்  தேவையை பூர்த்தி செய்கிறார்கள் என்று விமர்சித்தார். மற்ற கட்சிகள் அதிக அளவு செய்கிறார்கள் என்கின்ற வருந்த வேண்டாம் எனக் கூறிய கமல் நமது செலவு ரத்தமும், வியர்வையும் தான் தமிழகமே நம்முடைய  இலக்கு .தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா என்பது ஒரு கண்துடைப்பு. தங்களது கட்சி சார்பில் இங்கே போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெற்று, தொகுதிக்கு எதும் பணிகள் மேற்கொள்ளவில்லை என்றால் அவர்கள் பதவியை ராஜினாமா செய்வார் என்று கமல்ஹாசன் கூறினார்.

Categories

Tech |