நாடு முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்புகள் இன்னும் முடியவில்லை. இதனால் பல்வேறு நாடுகளும் தங்களுடைய சூழலுக்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் பெரு நாட்டை பொருத்தவரை இதுவரையும் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக மக்கள் பலியாகியுள்ளனர். இதையடுத்து அங்கு தற்போது பலரும் தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வருகின்றனர். எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில் பெரு நாட்டில் லிமா என்ற நகரில் இளம்பெண் ஒருவர் கட்டுப்பாடுகளை மீறி காரை ஓட்டி வந்துள்ளார்.
அவரை தடுத்து நிறுத்திய காவல்துறை அதிகாரி அவரிடம் விசாரணை நடத்தியுள்ளார். பின்னர் அவர் ஓட்டி வந்த காரின் விவரங்கள் மற்றும் விவரங்களை சேகரித்து கொண்ட அவர் அபராதம் விதிக்க உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் வேண்டாம், என்னை மன்னித்து விடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த அதிகாரி அபராதம் கட்ட வேண்டாமென்றால் உதட்டில் ஒரு முத்தம் கொடு உங்களை விட்டு விடுகிறேன் என்று கூறியுள்ளார். இதை ஏற்றுக் கொண்ட அந்த பெண் போலீஸ் அதிகாரிக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதை உள்ளூர் வீடியோ டிவி சேனல் மூலம் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.
காவல்துறையினரின் இந்த செயலை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் .இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த விஷயத்தில் பல்வேறு விதிமுறைகளும் நடந்துள்ளன. அந்த இளம் பெண் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. மேலும் அந்த போலீஸ் அதிகாரி அதற்கு உடன்பட்டுள்ளார். மேலும் இருவர் தங்களுடைய முக கவசங்களை கழட்டியுள்ளனர். இத்தனை விஷயங்கள் மிகவும் கண்டிக்கத் தக்கவை என்று கூறப்பட்டுள்ளது.