தமிழக முதல்வர் செய்தியாளர் சந்திப்பில் கூறிய கருத்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனவை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகைகளிலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் பரவி இருக்கின்றன.
சென்னை மாநகரம் மற்றும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கின்றன. அதை கட்டுப்படுத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அரசைப் பொறுத்த வரைக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அனைத்து வகைகளையும் நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. நாளொன்றுக்கு 13,000 பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மாநகராட்சியில் 4000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுகின்றது. இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள. தமிழகத்தில் 3 ஆயிரத்து 371 வென்டிலேட்டர்கள் இருக்கின்றது. ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று முதல்வர் தெரிவித்தார். தமிழக அரசு ரேசன் கடைகள் மூலம் மாஸ்க் வழங்கினால் ரொம்ப நன்றாக இருக்கும் என தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.