Categories
தேசிய செய்திகள்

இதை செய்யாவிட்டால் உங்கள் வங்கிக் கணக்கு மூடப்படும்… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் 500 இருப்பு வைத்து இருக்க வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதி டிசம்பர் 12 இன்று  முதல் அமலுக்கு வரும். இந்தியா போஸ்ட்டை பொறுத்தவரை இப்போது சேமிப்பு கணக்கில் குறைந்தது ரூபாய் 500 வைத்திருக்கவேண்டும். இதுதொடர்பாக இந்திய தபால் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் “தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை வைத்திருப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு கட்டணத்தை தவிர்ப்பதற்காக 12.12.2020க்குள் தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் குறைந்தது 500 ரூபாயை டெபாசிட் செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் ரூபாய் 100 மற்றும் ஜிஎஸ்டி பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தொகை உங்கள் கணக்கில் இருந்து கழிக்கப்படும். கணக்கில் இருப்பு பூஜ்யமாக இருந்தால் கணக்கு தானாக மூடப்படும்.

Categories

Tech |