கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு நடிகர் சந்தீப் கிஷன் உதவி வருகிறார்.
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் இதனால் பலியாகுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு நடிகர் சந்தீப் கிஷன் உதவ முன்வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு அதனுடன் ஒரு இ-மெயில் முகவரியையும் பதிவிட்டுள்ளார். மேலும், “இந்த சவாலான நேரத்தில் துரதிஷ்டவசமாக கொரோனாவால் தங்களது பெற்றோர்களை இழந்த தவிக்கும் குழந்தையை நீங்கள் அறிந்தால் தயவுசெய்து கீழே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பவும்.
எங்கள் குழு அந்தக் குழந்தைகளுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான உணவு மற்றும் கல்வியை அளித்து எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம். இது சோதனை நேரம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்க வேண்டும். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு உங்களால் உதவ முடிந்தவற்றை செய்ய முயற்சியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
Please Pass on the word..
Love you All ❤️
SK pic.twitter.com/tsgRsgJtSz— Sundeep Kishan (@sundeepkishan) May 3, 2021