Categories
மாநில செய்திகள்

“எம்.எட்” படித்திருந்தால்… கல்வியியல் கல்லூரிக்கு மாற்றம்… கல்வித்துறை அறிவிப்பு…!!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை கல்வியல் கல்லூரிக்கு மாற்றம் செய்ய கல்லூரி நிர்வாகம் தெரித்துள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மற்றும் நெட், ஸ்லெட் அல்லது பிஹெச்டி டிகிரி படித்து முடித்து வேலை பார்த்து வரும் உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களை கல்வியியல் கல்லூரிகளுக்கு பணியிடை மாற்றம் செய்ய கல்லூரிக் கல்வி இயக்ககம் முடிவு செய்திருக்கிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்றவாறு மேற்குறிப்பிட்ட விவரங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பேராசிரியர்களுடைய விவரங்களை கல்லூரியிலிருந்து வாங்கி நாளைக்குள் மின்னஞ்சல் வழியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து மண்டல கல்வி இணை இயக்குனர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணச்சந்திரன் உத்தரவிட்டிருக்கிறார்.

Categories

Tech |