மக்களின் ஆசீர்வாதம் கிடைத்தால் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி காட்டுவேன் என்று கமல் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தனது மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் முடித்துள்ளார். இதையடுத்து அருப்புக்கோட்டை தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் பொதுக்கூட்டம் நடத்தியுள்ளார். அதில், “புகழ் என்பது எனக்கு புதியது கிடையாது. உங்கள் தயவால் தான் அதை எனது ஐந்து வயது முதலே அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
உங்களுடைய ஆசீர்வாதம் மட்டும் கிடைத்தால், தமிழ் நாட்டின் தலையெழுத்தை நான் நிச்சயம் மாற்றி காட்டுவேன். மேலும் உங்களது அன்பை பல காலங்களாக உணர்கிறேன். எனது எஞ்சிய வாழ்க்கை அனைத்தையும் மக்களாகிய உங்களோடு தான் செலவிடுவேன். தமிழன் தலை நிமிர வேண்டும் .நெஞ்சை நிமிர்த்து ஓட்டு போட வேண்டும்” என்று கூறியுள்ளார்.