Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரூ1,00,000 கொடுத்தால் ரூ2,50,000 தாரேன்… ஆசைகாட்டி ரூ15 கோடி மோசடி… பணம் கொடுத்து பரிதவிக்கும் அப்பாவிகள்..!!

ஈரோட்டில் 15கோடி வரை மோசடி  செய்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி  தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு பேட்டை மேற்கு வீதியில் குவாலிட்டி டிரேடர்ஸ் என்ற நிறுவனம் கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ரிலீப் ஹெர்பல்ஸ் என்ற பெயரில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன. நிறுவனத்தில் கெம்பநாயக்கன்பாளையம் சேர்ந்த தங்கராஜ் என்பவர் நிர்வாக இயக்குனராகவும், கடம்பூர் மலைப் பகுதியைச் சேர்ந்த ஆனந்த், பிரகாஷ் கவுண்டன் பாடி ஆடி பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் பங்குதாரர்களாகவும் இருந்துள்ளனர்.

Image result for 15 கோடி

இந்நிலையில் தங்கள் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 100 நாட்களுக்கு தினமும் 2,500 ரூபாய் வீதம் வழங்குவதாக ஆன்லைனில் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்துள்ளனர். பணத்தை பெற்ற உடன் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை ஒப்பந்தத்தை வழங்கியதுடன் பணம் செலுத்தியவர்களின் வங்கிக் கணக்கில் தினமும் 2,500 ரூபாய் செலுத்தியதால் இதனை நம்பி 1,300க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

Image result for பண மோசடி

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக தங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தபடாததால் பணத்தை திருப்பி தருமாறு மக்கள் கேட்டவுடன், நிறுவனத்தை நடத்தி வந்த தங்கராஜ் பிரபாகரன் ஆகியோர் தலைமறைவாக பணம் செலுத்திய மூன்று பேர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து நிறுவன பங்குதாரர் பிரபாகரன் சங்கரின் தந்தை துரைசாமி காசோலை வழங்கிய பொன்னுசாமி ஆகியோரை கைது செய்த காவல்துறையினர். தலைமறைவாக இருக்கும் 3 பேரை தேடி வருகின்றனர். இந்த நிறுவனம் சுமார் 15 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில்  தெரியவந்துள்ளது.

Categories

Tech |