Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை நோய் இருந்தால்…. என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும்…. இதோ தெரிந்துகொள்ளுங்கள்…!!

உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அது உங்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதித்து விடும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாய் வறட்சி, சோர்வு, காலில் உணர்வின்மை போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இம்மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் உடனே ரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும். மேலும் மருத்துவரை சந்திக்க வேண்டும். எனவே பற்இது றி தெரிந்து கொள்வது அவசியமானது. அந்த வகையில் சர்க்கரை அளவு அதிகமானால் எந்த உறுப்புகளெல்லாம் மோசமாக பாதிக்கப்படுகிறது என்று பார்க்கலாம்.

ரத்தநாளங்களின் சேதத்தால் சருமத்தில் கருமையான படலங்கள் ஏற்படுகின்றது. கழுத்து, கைகள், கால்களை சுற்றி உள்ள பகுதிகளில் கருமையான படலங்கள் காணப்படுவது சர்க்கரை நோயின் முதல் அறிகுறி.

சர்க்கரை நோய் இருந்தால் இதயநோய் பிரச்சினையை உண்டாக்கும். உயர் ரத்த சர்க்கரை நோய் இதய ஆரோக்கியத்தை கெடுக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் மாரடைப்பு மற்றும் மற்ற இதயம் சார்ந்த நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

பாதத்தில் உள்ள நரம்புகளின் செயலிழப்பு காரணமாக உருவாவதுதான் கால்களில் உணர்வின்மை, மரத்துப் போதல் ஆகியவை. இவை சர்க்கரை நோயின் அறிகுறிகளில் ஒன்று.

சர்க்கரை நோய் பார்வை திறனை மோசமாக்கி தீவிர நிலையில் பார்வை இழப்பை உண்டாக்குகிறது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்திருப்பவர்களுக்கு சிறுநீரகம் மோசமாக இருப்பதால் சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாமல் போகும். இதனால் டயாலிஸிஸ் போட தேவைப்படும்.

Categories

Tech |