செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை …. சொத்து பட்டியலை நான் பேரணி போகும் போது வெளியிடுவேன் என சொல்றது… ஏற்கனவே அரவகுறிச்சியோட சட்டமன்றத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்கின்ற பொழுது… அந்த நபருடைய சொத்து பட்டியலும் அதுல இணைக்கப்பட்டிருக்கிறது. ஒன்றை வருஷத்திற்கு முன்னாடி இணைக்கப்பட்டிருக்கின்றது சொத்து பட்டியல் அதிலேயே இருக்கு..
நான் அதிகாரியா பணி புரியும் போது…. எவ்வளவு சம்பளம் வாங்குன ? எவ்வளவு வருமானம் வந்தது ? என அதிலே இருக்கு. எவ்வளவு அசையும் சொத்து ? எவ்வளவு ஆசையா சொத்து ? என எல்லா விவரங்களும் அதில் இருக்கு. அதை திரும்ப ஒரு தடவை வெளியிட வேண்டிய அவசியம் என்ன இருக்கு ? நான் சிம்பிளா ஒரே ஒரு கேள்வி கேட்டேன்.
வாங்குன கடிகாரத்திற்கு பில் இருக்கா ? இல்லையா ? ஒன்னு நீ தேர்தலுக்கு முன்னாடி வாங்கி இருந்தா அதை கணக்கில் காட்டி இருக்கணும். தேர்தலுக்கு பின்னாடி வாங்கி இருந்தால் நான் ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தேன்… பில்லை வெளியிடுங்கள் என்று சொல்லி… இல்ல ஒரு மணி நேரத்தில் வெளியிடவில்லை. ஒரு நாள், இரண்டு நாள், மூணு நாலு…. மடியில கனமில்லனா… வழியில பயம் இல்லைன்னு போயிட்டு இருக்கலாம்.
உன் மடியில் கனம் இருக்கு, அப்போ வழியில பயந்து தான் போயாகணும். உன்கிட்ட பில் இருந்தா ? ஒரு நிமிஷத்துல வெளியிட்டு போக வேண்டியது தானே… தூய்மையான அரசியல்வாதி… நான் சொல்கின்ற கருத்துக்கள் எல்லாம் சரியான கருத்துக்கள் என சொல்லு… நீ முதல்ல உண்மையா இரு… நீ முதல்ல நேர்மையா இரு..
நீ வார் ரூம் போட்டு, வார் ரூம்ல ஆட்களை நியமித்து, தொழில் அதிபர்களை மிரட்டி…. அந்த பதிவிலே சொல்லி இருக்கேன். நீங்க யாரும் பெருசா எடுத்துக்கல. வார் ரூம் மூலமாக யார் யார் தொழிலதிபர்கள் மிரட்டப்படுகிறார்கள் ? யாரிடமிருந்து என்ன வசூலிக்கப்படுகிறது ? அப்படி எல்லாம் எல்லாரும் பல்வேறு கருத்துக்களை சொல்றாங்க என விமர்சித்தார்.