வேப்பம் பொடியை பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்றுஇப்போது பார்க்கலாம்.
வேப்பிலைகளில் இருந்து தயாரிக்கப்படும் வேப்பம் பொடி எளிதாக நம் வீட்டில் தயாரிக்கக் கூடியது. எளிமையாக கிடைக்கக்கூடிய ஒரு பொருள். வேப்பிலை உடலில் பலவித குறைபாடுகளை நீக்கும் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் முன்னோர்கள் காலத்திலிருந்தே வேப்பிலை, வேப்பம் பொடி தயாரித்து பயன்படுத்துவது உண்டு. இது உடல், சருமம், கூந்தல் என அனைத்துக்கும் நன்மை அளிக்கக் கூடியது. இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொண்டால் இனி நீங்களும் பயன்படுத்த ஆரம்பித்து விடுவீர்கள்.
வேப்பம்பொடி தயாரிப்பு முறை :
வேப்பிலையை நன்கு சுத்தம் செய்து காம்புகள் நீக்கி நன்றாக அலசி நிழலில் காய வைக்கவேண்டும். பின்பு நன்கு இடித்து பின்னர் சலித்து பொடியாக்கி கொள்ளவேண்டும். குர்செடின் மற்றும் சிட்டோஸ்டெரால் போன்ற ஃப்ளவனாய்டுகள் உள்ளது. இது பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது உடலுக்கு உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் பயன்படுத்தலாம்.
பயன்கள்:
1.ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
2.எலும்புகளை உறுதிசெய்கிறது.
3.ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
4.கிருமிகளை தடுத்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்கிறது.
5.வேப்பம்பொடியை தலைக்கு பேக் போடும் போதெல்லாம் ஒரு டீஸ்பூன் கலந்து கூந்தலுக்கு போட்டு வந்தால் பொடுகு சேராமல் இருக்கும். இந்த பொடியை எலுமிச்சைச் சாறுடன் கலந்து உச்சந்தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து அலசினால் கூந்தல் சுத்தமாகும்.
6.இது அலர்ஜி எதிர்ப்பு கொண்டிருப்பதால் சரும வெடிப்பு, எரிச்சல், காயங்கள் நோய்த்தொற்று குறிப்பாக முகப்பருக்கு பயன்படுத்தலாம். முகத்திற்கு மேக்கப் போடும்போது சந்தனம் உடன் வேப்பம் பொடி கலந்து பயன்படுத்தினால் போதும்.
குறிப்பு:
வேப்பம் பொடியை காலை மாலை இரண்டு வேளையும் அரை டீஸ்பூன் அளவு எடுத்து அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதை தினமும் குடிக்க வேண்டியதில்லை. வாரம் இரண்டு முறை குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது,