தைராய்டு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே. இது உடலில் அயோடின் உ ப்பின் அளவு குறைந்தால் வரும் பிரச்சனை ஆகும். மேலும் அறிகுறிகளே தென்படாமல் உடலில் தைராய்டு நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனை கண்டறியாமல் விட்டால் பல்வேறு பாதிப்புகளுக்கு வழி வகுத்துவிடும். இரண்டு வகை தைராய்டு பிரச்சனைகள் உள்ளது. ஒன்று ஹைப்பர் தைராய்டு மற்றொன்று ஹைப்போ தைராய்டு.
ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகளாக தூக்கமின்மை, எடை குறைவது, முடி உதிர்வது, கண் எரிச்சல், பயம் தோன்றுவது போன்றவற்றை ஆகும்.
ஹைப்போ தைராய்டின் அறிகுறிகளாக மலம் கழிப்பதில் சிக்கல், மாதவிடாய் பிரச்சனை, உடல் சோர்வு போன்றவை ஏற்படும்.
இது போன்ற பாதிப்புகளை உண்டாக்க கூடிய இந்த தைராய்டு நோயை புறக்கணிக்காதீர்கள். இது குறித்த சந்தேகம் ஏதேனும்உங்களுக்கு இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது கட்டாயம் அவசியம்.