தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, 100 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டி கொடுக்க போறோம்னு தேர்தல் வாக்குறுதியில் சொன்னீங்க. அந்த செங்களையும் பட்டத்து இளவரசர் தூக்கிக்கொண்டு சென்று விட்டாரா ? உங்க ரேஞ்சுக்கு, உங்க லெவலுக்கு தான் ஒரு எதிரி வருவான்னு பார்த்தா…
பீடி தொழிலாளர்களுக்கு ஒண்ணுமே காணோமே.. இதையெல்லாம் தொடர்ந்து நாம் கேட்டுட்டே இருக்கிறோம். நாம உபி என்று சொல்லுவோம்… உடன்பிறப்பு… ஒரு உடன்பிறப்பு சொன்னாரு…. தளபதி இந்த சங்கீஸ் தொல்லை தாங்க முடியலை தளபதி என சொன்னாரு.
என்ன மாதிரி மாடு மேய்க்கிறவன் தான் வருவான். அது எப்படி ? எங்க அப்பா, எங்க தாத்தா, நானு… யோவ்… நாங்க தனியா வாறோம் நீ வாயா மொத்த குடும்பத்தையும் கூட்டிட்டு வா… இவனுங்க என்ன டெய்லி கேள்வி கேட்கிறானுங்க என நினைச்சீங்கன்னா ? அப்படி தான் தினமும் கேள்வி கேட்போம்.
அடுத்து பார்த்தீங்கன்னா… இந்த திமுக கட்சி. தனிப்பட்ட முறையில் என்னை விமர்சனம் என்பது செய்வது இவர்களுக்கு பொழுதுபோக்கு. ஒரு அவார்ட் கொடுப்பாங்க போல. இந்த மாதம் யாரு அண்ணாமலை அதிகமா திட்டுனது ? என கூறி அவார்ட் கொடுப்பாங்க போல.
காலையிலிருந்து இரவு வரை இவனுங்க ஆரம்பிச்சிருந்தாங்க. ஆரம்பிச்சு.. நம்ம குடும்பம். எங்க ? எப்படி ? என்ன படிச்ச ? இதுல நீங்க குடுக்குற கவனத்தை, கொஞ்சமாவது மக்கள் பக்கம்… மக்களுடைய குறைகள் பக்கம்…. கவனம் செலுத்துங்க என தெரிவித்தார்.