Categories
தேசிய செய்திகள்

ரோட்டில் மாடு சாணி போட்டால்…. ரூ.10,000 அபராதம்…. சுத்தமாக வைத்திருக்க…. மாநகராட்சி எடுத்த முடிவு…!!

மாடு ஒன்று சாலையில் சாணி போட்டதற்கு உரிமையாளருக்கு ரூ.10000 அபராதத்தை மாநகராட்சி நிர்வாகம் விதித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் மாநகராட்சி அங்குள்ள பகுதியில் பல்வேறு துப்புரவு பணிகளை செய்து வருகின்றது. சாலைகளில் குப்பைகளை போட கூடாது என்று அந்த மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. அதையும் மீறி சாலையில் குப்பை போடும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் கால்நடைகள் சாலைகளில் அசுத்தம் செய்து போடுவதால், உரிமையாளர்களுக்கு அவ்வப்போது உரிய அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எருமை மாடு ஒன்று சுத்தம் செய்யப்பட்ட சாலையில் சாணி போட்டுள்ளது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் அந்த மாட்டின் உரிமையாளர் ஒருவருக்கு ரூபாய் 10,000 அபராதம் விதித்துள்ளது. இதையடுத்து அந்த மாட்டின் உரிமையாளர் பத்தாயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். மேலும் மக்கள் தங்கள் பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |