அமெரிக்காவின் உளவுத் துறை தொடர்பான தகவல்களை முன்னாள் அதிபர் டிரம்புக்கு தெரிவிக்ககூடாது என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் அரசு நிர்வாகத்தில் இருக்கும் மிக முக்கியமான உளவுத்துறை தகவல்களை முன்னாள் அதிபர்களுக்கு தெரியப்படுத்தும் வழக்கம் உள்ளது. அதனடிப்படையில் முன்னாள் அதிபர் டிரம்புக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இதற்கு எதிராக அதிபர் ஜோ பைடன் பேசியுள்ளார்.
இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாவது, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு எந்த மதிப்பீட்டின்படி உளவுத் தகவல்களை தெரிவிப்பது? ஏனென்றால் அவரிடம் தெரிவிக்கப்படும் உளவுத் தகவல்கள் வெளியே கசிந்து விடும். அதுமட்டுமின்றி, அதைப்பற்றி ஏதாவது கமெண்ட் அடிப்பதைத் தவிர வேறு என்ன பலன் கிடைக்கும். ஆகையால் டிரம்ப்க்கு தகவல்களை அளிக்க தேவையில்லை என நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.