பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராகப் பேசுபவர்களை உயிரோடுஎரிக்க வேண்டும்” என உத்தரப்பிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங், கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் அலிகார் நகரத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்துணைத் முதல்வர் கேசவ் பிரசாத்மவுரியா, தொழிலாளர் துறை அமைச்சர் ரகுராஜ் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.அப்போதுதான், “சிஏஏ-வைஎதிர்ப்பவர்கள் வெறும் 1 சதவிகிதம் பேர்தான். இந்தியாவில் தங்கியிருந்து, எங்கள் வரிகளைச் சாப்பிட்டு எங்கள் தலைவர்களுக்கு எதிராக ‘முர்தாபாத்’ என்று கோஷங்களை எழுப்புகிறீர்கள்.
பொடா சட்டத்தின் கீழ் நீங்கள் எல்லோரும் சிறைக்குச் செல்லப் போகிறீர்கள். உங்கள் எதிர்காலத்துடன் விளையாடாதீர்கள். முதல்வர் யோகிக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராகப் பேசினால், நீங்கள் எல்லோரும் உயிருடன் எரிக்கப்படுவீர்கள்” என்று அமைச்சர் ரகுராஜ் சிங் மிரட்டல் விடுத்துள்ளார்.மேலும், “அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றும், “பாதுகாப்புப் படையினரிடம் அதிகப்படியான உரிமைகள் வழங் கப்பட்டு உள்ளது” என்றும் ரகுராஜ் சிங் பயமுறுத்தியுள்ளார்.