Categories
லைப் ஸ்டைல்

உஷார்! லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்தினால்…. இந்த நோய் நிச்சயம் வரும்…!!

லேப்டாப்பை மடியில் வைத்து உபயோகப்படுத்துவதால் என்ன பிரச்சினையை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் ஐடி துறையில் வேலை செய்பவர்களும், கணினியில் பணிபுரிபவர்களும் லேப்டாப்பை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதில் ஒரு சிலர் லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துகின்றனர். ஆனால் இப்படி ஆண்களோ அல்லது பெண்களோ பயன்படுத்தினால் பிரச்சினை அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இப்போது லப்டப்பை மடியில் வைத்து பயன்படுத்துவதால் என்ன பிரச்சினை ஏற்படும் என்று பார்க்கலாம்.

பிரச்சினைகள்:

லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்தினால் ஆண் பெண் இருவருக்கும் சருமப் புற்று நோய் குழந்தையின்மை போன்ற பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது.

மேலும் லேப்டாப்பை பயன்படுத்தும்போது சரியாக உட்கார வில்லை என்றால் கழுத்து வலி, முதுகு வலி போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது.

லேப்டாப்பில் இருந்து வரும் வெளிச்சம் கண்களை பாதித்து தூக்கமின்மையை ஏற்படுத்தும் . எனவே முடிந்தவரை லேப்டாப்பை மடியில் வைத்து உபயோகம் செய்யாமல் இருப்பது சிறந்தது.

Categories

Tech |