Categories
அரசியல்

தங்கம் வாங்கணும்னா…. உடனே போய் வாங்குங்க…. சவரனுக்கு ரூ.640 சரிவு…!!

தங்கத்தின் விலை இன்று கிடுகிடுவென சரிந்துள்ளது தங்கம் வாங்குபவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2021 ஆம் வருடத்தின் முதல் வாரத்தில் தங்கத்தின் விலை உயர ஆரம்பித்தது. இதையடுத்து தங்கத்தின் விலை இன்று கிடுகிடுவென சரிந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகளின் அதிகரிப்பால் தங்கத்தின் விலை அதிகரித்தது. கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை அதிகமாக உயர்ந்ததால், தங்கத்தின் விலை ரூ.38, 000 க்கும் கடந்தும் விற்பனையானது. இவ்வாறு ஏற்ற இறக்கமாக காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை புத்தாண்டிற்கு பிறகு குறையுமா? என்று மக்களிடையே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மக்களின் எண்ணத்திற்கு மாறாக முதல் வாரத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. இந்த வார வர்த்தகம் உயர்வாக இருந்ததால் மீண்டும் தங்கம் விலை ரூ.39, 000 ஐ தாண்டியது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை கிடுகிடுவென இன்று சரிந்துள்ளது. சவரனுக்குரூ. 640 குறைந்து ரூ.38, 440 என விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 1,030 சரிந்து 74, 070 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தங்கம் விலை கிடுகிடுவென குறைந்திருப்பது  தங்கம் வாங்குபவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |