சிறுவன் ஒருவர் யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் தான் உடல்பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் உடற்பயற்சி செய்தால், உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புகளை குறைத்து இயற்கையாகவே உடல் எடையை குறைக்கலாம். உறுதியான தசைகள் மற்றும் எலும்புகளை பராமரிப்பதிலும் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் சிறுவன் ஒருவன் உடற்பயிற்சியினை, செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை சேஸ் இங்க்ராஹாம் என்ற நபர் ஒருவர் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது மகனான டிலான், யாருடைய உதவியும் இல்லாமல் புல் அப்ஸ் மற்றும் பர்பீஸ்சை சிரமம் இல்லாமல் செய்கிறார். இந்த வீடியோவை பார்த்தால் தெரியும், அந்த சுட்டிக் குழந்தையின் திறமையான உடற்பயிற்சியை பார்த்தால் உங்களுக்கு உடற்பயிற்சியின் அருமை தெரிய வரும். இதை பார்த்த நெட்டிசன் ஒருவர் ஆரோக்கியம் மிக்கவர் என சிறுவனை வாழ்த்தியுள்ளார். மற்றொருவர், சிறுவனால் தான் ஈர்க்கப்பட்டதாகவும், தானும் உடற்பயிற்சியை செய்ய ஆரம்பிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். சிறுவனின் இந்த வீடியோ சிலருக்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தைஎடுத்திக்காட்டியுள்ளது .
My son made up his own @CrossFit workout today without any guidance from me at all 😍 pic.twitter.com/HMWFzLO7Ru
— Chase Ingraham (@CaptAmericaXfit) December 31, 2020