உங்கள் உடல் ஆரோக்யமாக இருக்கிறதா? இல்லையா என்பதை எப்படி கண்டு பிடிக்கலாம் என்பதை பார்க்கலாம்.
உடலில் வாதம் பித்தம் கபம் எவ்வளவு இருக்கிறது என்பது நம் மலத்தின் மூலமாக கண்டுபிடித்துவிடலாம். அது உங்களுக்கு தெரியுமா? உணவு செரிமானத்தில் தான் தொடங்குகிறது நம்முடைய ஆரோக்கியம். நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். உணவை மென்று உமிழ்நீருடன் கலந்து சாப்பிடவேண்டும். பெருங்குடல் இயக்கங்கள் தொய்வின்றி இருக்க வேண்டும். இவை தாண்டி உணவு முறையும் சரியாக இருக்க வேண்டும். காலையில் எழுந்ததவுடன் மலம் கழிக்கும் ஒருவரின் ஆரோக்கியம் சீராக இருக்கிறது என்று அர்த்தம்.
உணவு மூலம் மூலமாக உள்ளே செல்லும் கழிவுகள் உடலில் சிறுநீர் வழியாக மலம் வழியாகத்தான் வெளியேறுகிறது. அதனால் இரண்டு முறை மலம் கழிப்பது உடலில் நச்சுகள் சேராமல் இருப்பதை குறிக்கும். இதை தினமும் ஒரு முறையாவது வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மலம் கழிக்காமல் இருந்தால் சில பிரச்சினைகள் இன்னும் அதிகரிக்கும். காலப்போக்கில் பெருங்குடலில் நரம்புகள் செயலிழந்து மலத்தை வெளியேற்ற வேண்டும் என்ற உணர்வை குறைக்கும்.
பித்தம், வாதம், கபம் மூன்றுமே உடலை சம அளவில் இருக்க வேண்டும். இதில் மூன்றில் ஒன்று குறைந்தாலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதைக்கொண்டு மலத்தின் தன்மை அறிந்து விட முடியும். மலம் கழிக்கும் போது, மலம் நீரில் மிதந்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் உங்களின் உணவு செரிமானம் சீராக இருக்கிறது என்று அர்த்தம். மலம் நீரில் மூழ்கி இருந்தால் உடல் ஆரோக்யமாக இல்லை என்று அர்த்தம். உடல் செரிமானத்தை மேம்படுத்தும் பணியை காட்டிலும் அதிகமான வேலையை குடலுக்கு கொடுத்திருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
இப்படி இருக்கும் போது உடலில் கபத்தை குறைக்க வேண்டும். உணவில் சீரகம் மிளகு சேர்த்த ரசத்தை அதிகமாக சப்ப்பிட்டு வேண்டும். இது செரிமான கோளாறு ஏற்படுவதை குறைக்கும். வாதத்தின் அளவு அதிகமாக இருந்தால் உடலில் வறட்சி இருக்கும். இந்த நாட்களில் மிகவும் இறுக்கமாக இருக்கும். இதை மலச்சிக்கல் என்று நினைக்காமல் தொடர்ந்து உணவில் பசு நெய் சேர்த்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து ஒரு வாரம் உங்களின் மலத்தின் தன்மை கண்டால் உடலில் என்ன பிரச்சினை என்பதை அறிய முடியும். அதோடு வாதத்தினால், கபத்தினால், பித்தத்தினால் வரக்கூடிய நோய்களை முன்கூட்டியே தடுக்க முடியும் எனவே இந்த மூன்றும் சமமாக இருப்பதால் பெருமளவு நோயை தடுத்து விடலாம்.