Categories
உலக செய்திகள்

‘உறுதியான ஐரோப்பியா ஒன்றியம்’…. ஜெர்மனி பொதுத்தேர்தல்…. வெற்றி பெற்ற மெர்க்கலின் அரசியல் வாரிசு….!!

இரு நாடுகளுக்கு இடையேயான நட்பு உறவு தொடரும் என ஜெர்மனியின் SPD காட்சியைச் சேர்ந்த Olaf Scholz தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த பொதுத் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் மெர்க்கலின் CDU/CSU பழமைவாதக் கூட்டணிக்கு 24.1%  வாக்குகளும் Olaf Scholzஸின் தலைமையிலான SPD கட்சி 25.7%  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக Olaf Scholz மெர்க்கலின் அரசியல் வாரிசு என்று கூறப்படுகிறார். இந்த நிலையில் உறுதியான ஐரோப்பியா ஒன்றியத்தை உருவாக்குவதே ஜெர்மனியின் முதன்மையான பணி என்று Olaf Scholz கூறியுள்ளார்.

இது நாட்டிற்கான உலகளாவிய வளர்ச்சியையும்  வெளியுறவுக் கொள்கைகளை முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவுடனான ஜெர்மனியின் உறவுகள் பற்றியும் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் ” transatlantic கூட்டணி ஜெர்மனிக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது. அதுமட்டுமின்றி மிகவும் தேவையானது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஜெர்மனி இடையில் நட்பு உறவு தொடர வேண்டும்.

ஆனால் தற்பொழுது சில கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். இதனை தொடர்ந்து Nord Stream 22 எரிவாயு குழாய் அமைப்பு  திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்களது கடமைகளை ஒழுங்காக பின்பற்ற வேண்டும். அதே நேரத்தில் உக்ரைன் ஒரு போக்குவரத்து கருவியாக பயன்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |