Categories
உலக செய்திகள்

ஐ.எஸ் பயங்கரவாத தலைவர் கொலை.. பிரான்ஸ் படை கொன்றதாக ஜனாதிபதி அறிவிப்பு..!!

ஐஎஸ் தீவிரவாத தலைவரை கொன்றால், 5 மில்லியன் டாலர்கள் பரிசு என்ற அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், பிரான்ஸ் படை அவரை கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாத தலைவரான, Adnan Abou Walid al Sahraoui என்பவர், கடந்த 2017ஆம் வருடத்தில்  அக்டோபர் மாதம், பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில், அமெரிக்க வீரர்கள் 4 பேரும், நைஜீரிய வீரர்கள் 4 பேரும் உயிரிழந்தனர். மேலும், அமெரிக்காவை சேர்ந்த 2 வீரர்களும், நைஜீரியாவின்  8 வீரர்களும் பலத்த காயமடைந்தனர்.

இதனால், அமெரிக்க அரசு, கடந்த 2019 ஆம் வருடத்தில் ஐஎஸ் தீவிரவாத தலைவரான Adnan Abou Walid al Sahraoui பற்றிய தகவல் தெரிவிப்பவர்கள் அல்லது அவரை கொன்றால், 5 மில்லியன் டாலர்கள் பரிசு என்ற அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில், Sahraoui-ஐ பிரான்ஸ் படை, ஆப்பிரிக்காவில் கொன்றதாக ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். “Sahel-ல் இருக்கும் பயங்கரவாத அமைப்பினை எதிர்த்து கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், பிரான்ஸ் நாட்டிற்காக தங்கள் உயிரைத்தியாகம் செய்த வீரர்கள், காயமடைந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர்களை நாடு நினைவுகூர்வதாக இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் தியாகம் வீண் போகவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

 

Categories

Tech |