ராட்சத அலையில் சிக்கி ஐடிஐ மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள புளியந்தோப்பு பகுதியில் ஐடிஐ மாணவரான சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது நண்பர்களான ஜீவா, தமிழரசன், கிஷோர், பூபாலன் உட்பட 6 பேருடன் மெரினா கடற்கரைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ராட்சத அலையில் சிக்கிய பூபாலன் மற்றும் ஜீவாவை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி விட்டனர். ஆனால் ராட்சத அலையில் சிக்கி சரவணன் கடலில் மூழ்கி விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அண்ணா சதுக்கம் பகுதியில் சரவணனின் சடலம் கரையொதுங்கியுள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் அவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.