Categories
உலக செய்திகள்

‘பழைய நிலைமைக்கு திரும்பிவிட்டோம்’…. நன்றி தெரிவித்த பட்டத்து இளவரசர்…. தகவல் வெளியிட்ட செய்தி நிறுவனம்….!!

கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து பழைய நிலைமைக்கு திரும்பிவிட்டதாக பட்டத்து இளவரசர் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று பரவலானது படிப்படியாக குறைந்து மீண்டும் பழைய நிலைமை திரும்பியுள்ளது. இதனை அபுதாபி பட்டத்து இளவரசரான ஷேக் முகமது பின் சயீத் தெரிவித்துள்ளார். இந்த கடினமான சூழலில் இருந்து நாங்கள் பல அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுக்கொண்டுள்ளோம்.

அதிலும் எங்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்” என்று கூறியுள்ளார். மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று பரவலானது ஆகஸ்ட் மாதத்திலிருந்து குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் கடந்த செவ்வாய்கிழமை அன்று புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 176 ஆகும். இதனை சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது வருடத்தில் மிகவும் குறைவான பதிவாகும். மேலும் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதியிலிருந்து சில பகுதிகளில் முககவசம் அணிவது தளர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் விகிதங்களின் அடிப்படையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான புதிய விதிமுறைகளை அபுதாபி அறிவித்துள்ளது.

Categories

Tech |