பிலிப்பைன்ஸ் நாட்டினர் ஒருவரின் எக்ஸ்ரேவை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கென்ட் ரயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுரங்கத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றபோது சில மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தியுள்ளனர். இதனால்அவர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.அதை பார்த்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு வலிநிவாரணி மருந்துகளை கொடுத்து உள்ளனர். அதனால் இவர் சில நாட்கள் ஓய்வில் இருந்துள்ளார்.
அதன் பிறகு வேலைக்கு சென்றுள்ளார்.ஆனால் அங்கு காயம் காரணமாக சிகிச்சை பெற்று கொண்ட மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் வழங்க வேண்டும் என்று வேலையின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். அதனால் அவர் மருத்துவ சான்றிதழ் வாங்குவதற்கு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனக்கு நேர்ந்தவற்றை சொல்லி மருத்துவச் சான்றிதழ் கேட்டு உள்ளார். அதற்கு அந்த மருத்துவர்கள் உங்களை பரிசோதனை செய்த பின்னரே மருத்துவச் சான்றிதழ் வழங்குவோம் என்று கூறியுள்ளனர்.
அதன்பிறகு அவரை பரிசோதிக்க மருத்துவர்கள் அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரின் விலா எலும்புக் கூட்டுக்கு அருகில் நுரையீரலில் ஒரு அங்குலம் மட்டும் இடம் விட்டு கூர்மையான கத்தி ஒன்று இருப்பது தெரிய வந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனே அவரிடம் தகவலை தெரிவித்தனர். ஆனால் அவர் சிறிதும் கவலைப்படாமல் இதற்குமுன் சிகிச்சை பெற்ற மருத்துவமனை தான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறினார்.
மேலும் அவர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் எந்த அளவிற்கு கவனமுடன் நோயாளிகளை கவனிக்கிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு சான்று என்று நெத்தியடி பதில் கூறினார். அதுமட்டுமல்லாமல் அவ்வபோது நுரையீரல் பகுதியில் வலி ஏற்படும் ஆனால் அதை நான் கண்டுகொள்ளாமல் வேலைக்கு சென்று விடுவேன் என்று தெரிவித்தார். ஆனால் மருத்துவர்கள் இந்தக் கத்தியை அகற்றும் வரை தங்களால் வேலைக்கு செல்ல முடியாது. அதே நேரத்தில் அப்போது ஏற்பட்ட காயத்தை அந்த மருத்துவர்கள் ஒழுங்காக பார்க்காததால் இந்த விளைவு ஏற்பட்டுயுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அந்த மருத்துவமனை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தான் இந்தப் பிரச்சனையிலிருந்து உடனடியாக குணமாகி வேலைக்கு போனால் போதும் என்று தெரிவித்துள்ளார்.