சீனாவில் தன்னை ஏமாற்றிய காதலனை இளம்பெண் ஒருவர் வித்தியாசமான முறையில் பழி வாங்கியுள்ளார்.
சீனாவில் உள்ள ShangDong பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் காதலனால் ஏமாற்றப்பட்டுள்ளார். இதனால் தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்கும் எண்ணத்துடன் இருந்த அந்த பெண் ஆன்லைன் மூலம் டீ-யை ஆர்டர் செய்து அதை தன்னுடைய முன்னாள் காதலனின் முகத்தில் ஊற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இளம்பெண் கூறியது போலவே டெலிவரி செய்ய வந்த நபர் அந்தப் பெண்ணின் காதலனின் முகத்தில் டீயை ஊற்றி உள்ளார். சற்று நேரத்தில் என்ன நடந்தது என்று தெரியாமல் அந்த இளைஞன் முழித்துள்ளார். அதன் பின்பு டெலிவரி செய்யும் நபர் இளைஞனிடம் டெலிவரி சீட்டு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தனது முன்னாள் காதலி இந்த செயலை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது இளைஞனுக்கு தெரியவந்தது .
அதற்கு பிறகு தான் செய்தது தவறுதான் என்பதை உணர்ந்த டெலிவரி செய்யும் நபர் அந்த இளைஞரிடம் மன்னிப்பு கேட்டார். பின்பு முகத்தில் தான் ஊற்றி டீயை துடைப்பதற்கு துணியையும் கொடுத்தார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
https://youtu.be/9EvUdb_kN3E