Categories
சேலம் மாவட்ட செய்திகள்

6 மாதத்தில்..” முடிவுக்கு வந்த காதல் திருமணம்”… யாருமில்லா நேரத்தில் புது மாப்பிள்ளையின் முடிவு..!!

குடும்ப தகராறில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவர் அப்பகுதியில் உள்ள நகை கடையில் ஊழியராக பணிபுரிந்தார். பூபதி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காயத்ரி அப்பகுதியில் உள்ள கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். திருமணம் முடிந்த பிறகு கணவனும் மனைவியும் தனிக்குடித்தனம் சென்றுள்ளனர்.

கடந்த சில நாட்களாக கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம்  காயத்ரி தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு வந்த பூபதி வீட்டில் உள்ள ஒரு  அறையில் உட்புறமாக பூட்டிக் கொண்டு தூங்க  சென்றுள்ளார்.  நேற்று காலையில்  நீண்ட நேரமாகியும்  கதவு திறக்கப்படாததால்  சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர்  அவரது மனைவி மற்றும் பெற்றோருக்கு  தகவல் தெரிவித்ததனர்.

தகவலறிந்த காயத்ரியும் பூபதியின் பெற்றோரும் வந்து கதவை தட்டியுள்ளனர்.ஆனால் கதவு திறக்கப்படாததால்  ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர் . அங்கு பூபதி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூபதியின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான  காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |