திருமணமான சில மாதங்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவகுமார்-அபிஷா. இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சிவகுமார் அடிக்கடி மதுஅருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் -மனைவிக்கு இடையே பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் சிவகுமாரிடம் கோபித்துக்கொண்ட அபிஷா அவர் வேலைக்கு சென்ற பிறகு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த சிவகுமார் வீட்டில் மனைவி இல்லாததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் மனமுடைந்த சிவகுமார் தூக்குப்போட்டு கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சிவகுமாரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.