Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“என் மருமகளுக்கு எப்படி நீ தொல்லை கொடுக்கலாம்”… இளைஞனை வெட்டி கொன்ற மாமனார்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மருமகளுக்கு தொல்லை கொடுத்ததோடு அவரை அரிவாளால் வெட்டிய இளைஞனை மாமனார் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடியில் உள்ள மேலபனைக்குளம் என்ற பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஜெபராஜ்-அஜிதா. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த யோவான் என்ற இளைஞர் அஜிதாவை கிண்டல் செய்துள்ளார். அதனால் அஜிதாவிற்கும் யோவானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  அப்போது யோவான் அஜித்தாவை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதனால் காவல்துறையினர்  யோவானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஜாமீனில்  வெளியே வந்த யோவான் அஜிதாவின் குடும்பத்தினரிடம் சென்று வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜிதாவின் மாமனார் செல்லதுரை  யோவானை ஒரு காட்டுப்பகுதியில் வைத்து அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அஜிதாவை யோவான் எந்த இடத்தில் வைத்து வெட்டினாரோ அதே இடத்தில் யோவானின் வலது கையை கொண்டு வந்து செல்லத்துரை போட்டுவிட்டு தப்பி சென்று  தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் கொலை செய்துவிட்டு தலைமறைவான செல்லத்துரையை  தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |