Categories
உலக செய்திகள்

“கொரோனாவின் 2ம் அலை “… மன அழுத்தத்திற்கு ஆளான பதின்ம வயதினர்… வெளியான அதிர்ச்சி தகவல்….!!

கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக சுவிட்சர்லாந்தில் அதிக மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் பதின்ம வயது சிறுவர்கள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 20000 மன ஆலோசனை நிபுணர்களை கொண்டு  sanasearch என்ற இணையதளம் உளவியல் ஆலோசனை வழங்குவதற்காக செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் செப்டம்பர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை உளவியல் ஆலோசனை தங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் பதின்ம வயது சிறுவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, உளவியல் ஆலோசனை தேவைப்படும் பதின்ம வயது சிறுவர்களின் எண்ணிக்கை 52% உயர்ந்துள்ளது. இதன் பின்விளைவுகளாக சரியான முறையில் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருத்தல் மற்றும் தற்கொலை எண்ணம் தூண்டுதல் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவர் ஒருவர் கொரோனாவின்  இரண்டாவது அலை  தொடங்கிய பின்பு 60%  பதின்ம வயது சிறுவர்களும்  இளைஞர்களும் தங்களுக்கு உளவியல் ஆலோசனை வேண்டுமென்று தொடர்பு கொண்டதாக குறிப்பிட்டுள்ளார் .மேலும் கொரோனா பரவலால் வேலைவாய்ப்பு பயிற்சியை இழந்த 16 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் , தனிமையில் இருப்பதாக உணர்கிறவர்கள் போன்றோர் அடிக்கடி தகுந்த  உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் என்று ஆலோசனையாளர்களிடம் கேட்கின்றனர்.

எனவே இவ்வாறு சிரமப்படும் பதின்ம வயது இளைஞர்களும் சிறுவர்களும் சரியான நேரத்தில் தூங்க வேண்டும் என்றும் தினமும் மூன்று வேளையும் உணவை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மனம் மகிழ்ச்சி அடையக் கூடிய செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்குவதாக ஆலோசனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதைவிட மிகவும் முக்கியம் தனிமையில் இருக்காமல் நல்ல நண்பர்களோடு நேரத்தை செலவிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

Categories

Tech |