Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உங்களுக்கு அரிய வாய்ப்பு…. அரசின் கடன் உதவி திட்டம்…. ஆட்சியரின் தகவல்….!!

இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்காக மானியத்துடன் கடன் உதவி திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொருளாதார அடிப்படையில் நலிவுற்ற மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்கும் விதமாக 25%, 35% மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை மாவட்ட தொழில் மையம் மூலமாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடன் உதவி பெற வயது வரம்பு இல்லை மற்றும் படிக்காத இளைஞர்கள் சேவை தொழிலுக்கு 5 லட்சம் ரூபாய் மற்றும் உற்பத்தித் தொழில் கடனுக்கு 10 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம்.

இதனையடுத்து நடப்பு நிதியாண்டுக்கான நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு வருவதினால் இம்மாவட்டத்தில் வசிக்கும் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் www.kviconline.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன் பெற்றுக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு இம்மாவட்ட தேவராஜ் நகரில் இயங்கி வருகின்ற தொழில் மைய அலுவலகத்தில் நேரிலோ இல்லை என்றால் தொலைபேசி எண்: 04172-270111 மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |