டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு எழுதுபவர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி இலவச மாதிரி தேர்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியாளர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு நடத்தப்படும் தேர்வுகளில் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்படுகிறது. அதன்படி வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு பெறுகிறது. அந்த தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்ட மைய நூலகத்தில் வருகின்ற டிசம்பர் 27-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணிவரை இலவசமாக தேர்வு நடைபெற உள்ளது.
இந்த தேர்வில் பொது அறிவு பாடத்தில் 175 வினாக்கள், பொது அறிவு கூர்மை பகுதியில் 25 வினாக்கள் ஆக மொத்தம் 200 வினாக்கள் இடம்பெறும். தேர்வில் பங்கேற்க 9626273890, 0462-2585226 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை வருகின்ற 26ம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.