Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இளமைக்கு உதவும்…உருளைக்கிழங்கு..!!! இயற்கை வைத்தியம்….

உருளைக்கிழங்கின் நன்மை என்னனு தெரியுமா உங்களுக்கு ?

மண்ணில் விளையும் கிழங்கு வகைகளில் உருளைக்கிழங்கு ஏராளமான சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதிக சத்துள்ளதும் எளிதில் சமைக்கக் கூடியதுமாகிய  உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரிகள்  கிடைக்கின்றன.

எளிதில் ஜீரணமாக்க கூடிய இந்த உருளைக்கிழங்கில் வைட்டமின்கள், தாது உப்புகள், அதிகம் இருக்கிறது.  இந்த கிழங்கு அதிக நார்ச்சத்தும் கொண்டுள்ளது. வாழைப்பழத்தில் உள்ளது போன்று அதிக பொட்டாசியம் சத்து  உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது.

நமது உடலில் உள்ள புளித்த அமிலங்களை சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பதில் உருளைக்கிழங்கிற்கு முக்கிய பங்குண்டு.

யூரிக் அமிலத்தையும், புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றி விடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவு பாதையில் நட்புணர்வுடன் செயல்படும். பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்து விடுகிறது.

பச்சை உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் என்ன நன்மைனு பாக்கலாம்: 

வயிற்று புண், வயிற்று கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு வர  பிரசாதம். இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்கை பச்சையாக மிக்சியில் அரைத்து சாறு எடுத்து கொள்ளவேண்டும்.உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்குமுன்பாக இந்த சாற்றில் அரை கப் அருந்தினால் இறப்பை கோளாறுகள் குணமாகும்.

வாதநோய் குணமாகும்….

இரண்டு பச்சையான உருளைக்கிழங்குகளை தோலுடன் மிக்சியில் அரைத்து சிறிது தண்ணீர் விட்டு, இரண்டு தேக்கரண்டி சாற்றை , உணவு சாப்பிடுவதற்கு முன்பு, அருந்த வேண்டும். இப்படி அருந்தினால் உடலில் உள்ள  வாதநோயயை போக்கி அமிலத்தை வெளியேற்றும். தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும்.

உருளைக்கிழங்கில் உள்ள மாவுசத்து இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும், அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும், முன்கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும் , வாத  நோய்களுக்கும், நிவாரணம் அளிக்கும்.

கெட்டுபோன ரத்தம் குடல் பாதையின் நச்சுத்தனமை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளவர்கள். நீண்ட நாள் மலசிக்கலால் அவதிப்படுபவர்கள், உருளை கிழங்கு வைத்தியத்தை 6 மாதம்  பின்பற்றினால் பூரண நலம் பெறலாம்.

இரவு தூங்கபோகும் முன்னர் பச்சை உருளைக்கிழங்கை அரைத்து  முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு உறங்கினால், அதிகாலை எழும்பொழுது முகம் புத்துணர்வுடன் காணப்படும். அமேரிக்காவில் இந்த முறையில் தான்  இயற்கையாக, முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கி கொள்ள்கின்றனர்.

Categories

Tech |