18 வயது இளம்பெண்ணை கட்டாயத் திருமணம் செய்வதாக கூறி அழைத்து சென்ற 3 வாலிபர்களை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 18 வயதுடைய இளம்பெண்ணை அதே பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் கடத்தி சென்று ஆசை வார்த்தை கூறி கட்டாய திருமணம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபர் மற்றும் இளம்பெண்ணை தேடி வந்துள்ளனர்.
அப்போது இம்மாவட்ட நீலமங்கலம் பிரிவு சாலையில் இருக்கும் பாலத்தில் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மலைக்கோட்டாலம் கிராமத்தில் தலைமறைவாக இருந்த வாலிபரையும் அவருக்குத் துணை புரிந்த சுபாஷ் மற்றும் வெற்றிவேல் என 3 பேரையும் போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.