திருவிழாவுக்கு சென்ற இளம்பெண் கடத்தப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் வசிக்கும் 20 வயது இளம்பெண் உமராபாத் அருகில் இருக்கும் பாலூரில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்ள தனது சித்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்து திருவிழாவிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் இளம்பெண்ணின் தந்தை புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன இளம்பெண் என்ன ஆனார் அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.