குழந்தை இல்லாத விரக்தியில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மல்லிபட்டி பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் மன உளைச்சல் இருந்த அலமேலு அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அலமேலுவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண் தற்கொலை விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.