இளம்பெண் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு கவிதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மருந்து கடைக்கு வேலைக்கு சென்ற கவிதா இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பிவரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை செல்வராஜ் நண்பர்கள், உறவினர்கள் வீடு என பல்வேறு இடங்களில் கவிதாவை தேடி பார்த்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் கவிதா கிடைக்கவில்லை. இதுபற்றி ஆலங்குடி காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கவிதாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.