Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தாக்கிய நோயால் மனநலம் பாதிப்பு… இளம்பெண் எடுத்த முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாமக்கல் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்லில் உள்ள சின்ன முதலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஆறுமுகம் -காந்திமதி. இவர்களுக்கு ஜெயஸ்ரீ, சரண்யா என இரண்டு மகள்கள் உள்ளனர் . சரண்யா சிக்கன் குனியா நோயால் பதிக்கப்பட்டதால் சற்று மனநிலை குன்றியவராக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத  நிலையில் சரண்யா தூக்குப்போட்டு  கொண்டார்.

உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக  அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர் .ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |