குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரேவதி(27). இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு வீட்டு வேலைகளை கவனித்து வந்தார் . இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனது தாய் சகோதரிகளுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தாயுடன் ரேவதிக்கு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த அவர் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த ரேவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர் எழுதி வைத்திருந்த மூன்று பக்க கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் “எனது அம்மாவிற்கு என்னை விட மற்ற இரு மகள்களின் மீதுதான் அக்கறையும் பாசமும் அதிகம். அவர் என்னை மகளாக மதிப்பதில்லை. நான் எல்லாரையும் வெறுத்து விட்டேன். எனக்கு வாழ்க்கையும் வெறுத்துவிட்டது. எனக்கு அனைவரும் இருந்தும் இல்லாத போல் இருக்கிறது. எனக்கு என்று யாருமே இல்லை. நான் அனாதையாக இருக்கிறேன். என் சாவுக்கு பிறகு என் முகத்தை குடும்பத்தினர் யாரும் பார்க்க கூடாது” என்று எழுதியிருந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.