திருப்பூரில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபு(25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரேவதி(23) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் திருப்பூரில் உள்ள ஜி.என் கார்டன் பகுதியில் வசித்து வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தம்பதியர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ரேவதி உடல்நிலை சரியில்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதியருக்கு திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.