திருமணமான 2 1/2 ஆண்டுகளில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொத்தூரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் காவியா(21). இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ரவி கர்நாடக மாநிலத்தில் தறி வேலை செய்து வருகிறார். இதனால் காவியா தனது பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று திடீரென்று காவியா விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவியாவை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் காவியாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை லட்சுமணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருமணமான இரண்டரை ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் துணை போலீஸ் சூப்பிரண்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.