Categories
தேசிய செய்திகள்

“வழக்கை வாபஸ் பெற தொடர் மிரட்டல்”… பாலியல் வன்புணர்வுக்கு ஆளான இளம்பெண்ணின் விபரீத முடிவு…!!

உத்திரப்பிரேதச மாநிலத்தில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான இளம்பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பால் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி உள்ளார். இதனால் அவர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்நிலையில் இளம் பெண்ணை சீரழித்த அந்த நபரின் குடும்பத்தினர்  வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று அந்த  பெண்ணிற்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஆனால் காவல்துறையினர் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது . இதனால் மனவேதனையடைந்த அந்த பெண் திடீரென்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அந்த பெண்ணின் தாயார் குற்றம் சாட்டப்பட்ட நபரின் குடும்பத்தினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாலேயே  அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். இதற்கிடையில் நடப்பு  ஆண்டு ஜனவரி மாதம் அந்த இளம்பெண் மீண்டும் அப்பகுதியில் உள்ள காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த  புகாரின் பேரில் காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |