இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஜீவாநகர் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் சரஸ்வதியின் தாய் மகராசி தனது மகளை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் மகராசி ஜன்னல் வழியாக பார்த்தபோது மின்விசிறியில் சேலையால் சரஸ்வதி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மகராசி அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் சரஸ்வதியை உடனடியாக மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் சரஸ்வதியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மகராசி திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திருச்செந்தூர் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் நடந்த கபடி போட்டியை விஜய் பார்க்க சென்றுள்ளார். அவரை சரஸ்வதி வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் நீண்ட நேரம் நேரம் கழித்து தான் வருவேன் என விஜய் கூறியுள்ளார். இதனால் கோபத்தில் சரஸ்வதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.