இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நன்னேரி கிராமத்தில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் கனிமொழி என்பவரை இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கனிமொழியின் பெண் குழந்தை அழுது கொண்டே இருந்ததாகவும், அதற்கு பால் கொடுக்க கோபி கூறியதன் பேரில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது கனிமொழி திடீரென்று படுக்கை அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொல்ல முயன்றுள்ளார். இதனைப் பார்த்த கோபி அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கனிமொழி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.