இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகவேடு கிராமத்தில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சசிகலா தனது தங்கைக்கு திருமணம் நடைபெற இருக்கின்றதால் ஊருக்கு செல்ல வேண்டும் என ராஜேஷிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ராஜேஷ் திருமணத்திற்கு இன்னும் நாட்கள் இருக்கின்ற காரணத்தினால் தை அமாவாசைக்கு சாமி கும்பிட்டு விட்டு போகலாம் என கூறியுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சசிகலா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சசிகலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.